Sangathy

Sangathy

புதிய பஸ் சாரதிகள், நடத்துனர்களை சேவையில் இணைக்க தீர்மானம் – இலங்கை போக்குவரத்து சபை

Colombo (News 1st) பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பஸ் நடத்துனர்களை பணிநீக்கம் அல்லது பணியிடை நீக்கம் செய்ய நேரிடுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பஸ் நடத்துனர்கள் 381 பேரை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.

சாரதிகள் 912 பேரையும் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

%d bloggers like this: