Sangathy
News

இன்றைய வானிலை எதிர்வுகூறல்

Colombo (News 1st) நாட்டின் தென் மேற்கு பிராந்தியத்தில் நிலவும் கடும் மழையுடனான வானிலை இன்று(04) முதல் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென் மாகாணத்திலும் களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் மழையுடனான வானிலையால் சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக 12 மாவட்டங்களைச் சேர்ந்த 30,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 25,189 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, களுத்துறை, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

Pope Benedict XVI: Lying in state at the Vatican begins

Lincoln

Cardinal asks Catholic lawyers to remain politically independent

Lincoln

Democracy and Door Knocking.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy