Sangathy
Sports

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: மகளிருக்கான 400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு வெண்கல பதக்கம்

Colombo (News 1st) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு வெண்கல பதக்கம் உரித்தானது.

இன்று (04) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 03 நிமிடம் 30. 8 விநாடிகளில் திறமையை வௌிப்படுத்திய இலங்கை குழாம் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியது.

நதீஷா ராமநாயக்க, ஜயேஷி உத்தரா, சயுரி மென்டிஸ் மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

போட்டியில் தங்கப் பதக்கத்தை பஹ்ரேனும் வௌ்ளிப் பதக்கத்தை இந்தியாவும் சுவீகரித்தன.

இதனிடையே, ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனையை பதிவு செய்து இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.

3 நிமிடம் 2. 5 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த இலங்கை குழாத்தை அருண தர்ஷன, கௌஷிக கேஷான், ராஜித ராஜகருணா, காலிங்க குமாரகே ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

Related posts

When rugby ace Lanil travelled from Passara to Colombo and back for national team practices

Lincoln

Kevin Pietersen still open to owning a team in the SA20

Lincoln

Sri Lanka secure come-from-behind win after Chameera heroics

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy