Sangathy
News

ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம்

Afghanistan: ஆப்கானிஸ்தானில் இன்று (11) காலை மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஹெராத் நகருக்கு அருகே கடந்த 7 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 2500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கங்களின் போதும், 6.3 ரிக்டர் அளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

பல கிராமங்கள் தரைமட்டமாகி, 2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், அதே ஹெராத் நகருக்கு 28 கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது.

இதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.

கடந்த நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து  மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை இன்று (15) முதல் மீள ஆரம்பம்

Lincoln

PM Modi’s home state Gujarat votes in key regional election

Lincoln

Donald Trump signs orders to lower prescription drug prices

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy