Sangathy
News

4 பில்லியன் கடன் மறுசீரமைப்பிற்கு இலங்கை – EXIM வங்கி இடையே இணக்கம்

Colombo (News 1st) 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அடிப்படை வேலைத்திட்டத்திற்கு இலங்கையும் சீனாவின் EXIM வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளன.

நீண்ட கால கடன்களை மீளச் செலுத்துவதற்கான இலங்கையின் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்த உடன்பாடு உதவியாக இருக்குமென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு இணங்க பொதுக்கடன் நிலைத்தன்மையை அடைவதற்கான சீன EXIM வங்கியின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கடன் பெறுநர்கள்,வணிகக் கடன் வழங்குநர் குழுவுடன் சீன EXIM வங்கி தொடர்ந்தும் உறவைப் பேணுமென இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் சீன EXIM வங்கிக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது.

அந்த ஒப்புதலின் பின்னர், இரண்டாவது தவணைக் கொடுப்பனவான 334 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்குமென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையும் ன EXIM வங்கியும் அடுத்த சில வாரங்களுக்கு இதற்காக தீவிரமாக செயற்படுமென நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு கூட நிலைக்காது என்கிறார் குமார வெல்கம

Lincoln

Weight of political and economic pressure in Lanka hard to bear, destabilising, isolating, and frightening – Commonwealth Secretary General

Lincoln

ஆபாசப் படங்களை பகிர்ந்தாரா இயக்குனர் லோகேஷ் கனகராஜ்?

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy