Sangathy
News

மனிதாபிமான அடிப்படையில் மேலும் 2 பணயக் கைதிகளை விடுவித்துள்ள ஹமாஸ்

Colombo (News 1st) ஹமாஸ் படையினர் மேலும் 2 பணயக் கைதிகளை விடுவித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்ட ஹமாஸ் படையினர் ஏராளமான இஸ்ரேலியர்களையும் வெளிநாட்டினரையும் பணயக் கைதிகளாக பிடித்துச்சென்றனர்.

பணயக் கைதிகளில் சிலர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான பேரை இஸ்ரேல் மீட்டது. இந்த நிலையில், மேலும் இரண்டு பணயக் கைதிகளை விடுவித்துள்ளது ஹமாஸ்.

இதனை செஞ்சிலுவை சங்கம் உறுதி செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரண்டு அமெரிக்க பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்து இருந்தது.

இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் வயது முதிர்ந்த இரண்டு இஸ்ரேலியர்களை ஹமாஸ் தற்போது விடுவித்துள்ளது.
“உடல்நிலை சார்ந்த காரணங்களுக்காக வயது முதிர்ந்த இருவரை விடுவித்துள்ளோம்” என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Nurit Cooper (79), Yocheved Lifshitz  (85) ஆகிய இரண்டு பெண்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வீட்டில் இருந்தபோது ஹமாஸ் அவர்களை பிடித்துச் சென்றது. அவர்களது கணவர்களும் பணயக் கைதிகளாக  பிடிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் இன்னும் ஹமாஸ் வசம் உள்ளனர்.

சுமார் 220-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் ஹமாஸ் வசம் தற்போது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊருபொக்கயில் 6 மாத குழந்தை கொலை; 22 வயதான தாய்க்கு விளக்கமறியல்

Lincoln

வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

Lincoln

கின்னஸ் சாதனை: 1,247 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy