Sangathy
News

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

Colombo (News 1st) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்வி அமைச்சரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 750 ரூபாவை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரினார். 

புலமைப்பரிசில் பெறுவோரின் எண்ணிக்கை 20,000-இல் இருந்து 30,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். 

இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இம்முறை கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டை சேமித்து இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படாத வகையில், புலமைப்பரிசில் பரீட்சையை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். 

Related posts

ரயில்வே திணைக்கள மறுசீரமைப்பு தொடர்பான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை

Lincoln

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் சிவில் தரப்பினர், நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்குவது அவசியமானது: அமெரிக்க தூதுவர்

Lincoln

Cabinet has not seen IMF agreement

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy