Sangathy
News

சீன EXIM வங்கி – இலங்கை இடையிலான ஒப்பந்தம் Paris Club-இற்கு வழங்கப்பட்டுள்ளது

Colombo (News 1st) நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் EXIM வங்கிக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, Paris Club உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மேற்கோள்காட்டி, Bloomberg செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் வழங்குனர்கள் தங்கள் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முன்கொண்டு செல்ல சீனாவின் நிலைப்பாட்டை இலங்கை எதிர்பார்த்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தை இந்த வருட இறுதிக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்ததாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

Related posts

Trump working on executive order to establish merit-based immigration system for US

Lincoln

எல் நினோவை எதிர்கொள்ள பெருவில் 544 மாவட்டங்களில் அவசரகால நிலை பிரகடனம்

Lincoln

Sirisena advises RW against rushing to implement 13A fully

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy