Sangathy
News

ஆசிரியர்களாக நடித்து பெற்றோர்களிடம் பண மோசடி; இருவர் கைது

Colombo (News 1st) ஆசிரியர்களாக நடித்து பெற்றோர்களிடம் பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கிராந்துருகோட்டே பகுதியை சேர்ந்த 25 மற்றும் 37 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபர்கள் பாடசாலை மாணவர்களின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் பிள்ளை சுகவீனமடைந்துள்ளதாகவும் அவசர சிகிச்சைக்கு பணம் அனுப்புமாறும் தெரிவித்து, வங்கிக் கணக்கு விபரத்தை வழங்கி பணம் பெற்றுள்ளனர். 

கம்பஹா, ஜா-எல, கந்தானை, பமுணுகம, வீரகுல, பூகொடை, பேராதெனிய பகுதிகளில் உள்ள பெற்றோரிடம் இருந்து இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்கள் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளனர். 

இவ்வாறு பண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். 

Related posts

Singapore’s ruling PAP wins general election held during pandemic, loses vote share

Lincoln

Will new dispensation revisit MCC agreement with USA?

Lincoln

முதலீடுகளை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஸ் குணவர்தன இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy