Sangathy
NewsSrilanka

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிரான மனு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி பரிசீலனை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபை மனுவொன்றைத் தாக்கல் செய்யது.

இந்த மனு இன்று (05) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை என நீதிமன்றில் தெரிவித்தார்.

இதற்கமைவாக வழக்கு விசாரணையை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விசாரணை நடத்தப்படும் வரையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.

Related posts

Two Lankan films recognized at Rotterdam Intl Film Festival

Lincoln

Fire destroys organ, shatters stained glass at Nantes cathedral in France

Lincoln

காணாமற்போயிருந்த பெண்ணும் அவரது குழந்தையும் காட்டில் இருந்து சடலங்களாக மீட்பு; உறவினர் கைது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy