Sangathy
IndiaNews

விஜய் திவாஸை முன்னிட்டு மறைந்த இராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

விஜய் திவாஸ் நாளையொட்டி, போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இராணுவ வீரர்களின் தியாகங்கள் இந்தியாவுக்கு தீர்க்கமான வெற்றிக்கு வழிவகுத்தன. அவர்களின் அசைக்க முடியாத மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு, நாட்டின் வரலாற்றிலும் அதன் மக்களின் இதயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் டாக்காவில் இந்திய படைகளிடம் சரணடைந்தனா்.

இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 16 ஆம் தேதி ‘விஜய் திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (பங்களாதேஷ்) இந்தியா விடுதலை பெற்று தந்தது.

இந்த நிலையில், போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளையொட்டி, போரில் உயிா்நீத்த வீரா்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

Related posts

சுற்றுலா பயணிகளுடன் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல்

Lincoln

14% of those under five are underweight

Lincoln

Coronavirus: Hong Kong to suspend all schools after spike in locally transmitted cases

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy