Sangathy
NewsSrilanka

மாவீரர் நினைவேந்தலை ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்ட நால்வர் பிணையில் விடுதலை

மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டதற்காக கைது உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் உட்பட நான்கு பேர் இன்று (19) பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று முடிந்த நிலையில் அதனை ஒருங்கிணைத்தவர் மற்றும் உயர்தரம் பயிலும் மாணவன் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வாழைச்சேனை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தியிருந்தனர்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடியிருந்த நிலையில் நேற்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இன்று பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

Related posts

COPE recommends closure of loss-making overseas branches of SLIC

Lincoln

US travel industry seeks govt assistance, new tax breaks to spur trips

Lincoln

ராகமயில் துப்பாக்கிச்சூடு; வர்த்தகர் உள்ளிட்ட மூவர் காயம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy