Sangathy
News

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் – நிஹால் தல்துவ!

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்று (27) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகை கால விசேட கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியமையினால் 3 நாட்களுக்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை குறைக்க நேரிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வரை போதைப்பொருளுடன் தொடர்புடைய 13,666 பேர்” யுக்திய” சுற்றிவளைப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1,097 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சகலரையும் சட்டத்திற்கு முன்பாக நிறுத்தும் வரை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

SLC needs new constitution: Eran

Lincoln

CEAT Kelani debuts new locally-made Truck Bus Radial for transport sector

Lincoln

Govt. withholds nutrition pack from pregnant women who earn more than Rs 50,000

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy