Sangathy
News

இழுபறியில் தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி – இரகசிய வாக்கெடுப்புக்குத் தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்காக விண்ணப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் இன்று (11) மு.ப. 10.45 மணிக்கு மாதிவெலவிலுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

எனினும், இக்கலந்துரையாடலில் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பிலான இணக்கப்பாடுகள் எவையும் எட்டப்படவில்லை என்பதால் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஜனநாயமுறையிலான இரகசிய வாக்கெடுப்பு மூலம் தமிழரசுக் கட்சிக்கான தலைவர் தெரிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

60 வீத கைதிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் – சிறைச்சாலைகள் திணைக்களம்

Lincoln

கண்டி நகரை அண்மித்து விசேட சுற்றிவளைப்பு

Lincoln

Remembering Upali Wijewardene, founder of Upali Group

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy