Sangathy
LatestNewsSrilanka

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு..!

யாழில் குழந்தை பிரசவித்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மாதகல் மேற்கு பகுதியைச் சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது 28) என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு கடந்த 23 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 24 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

இதன்பின்னர் அவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை குழந்தை பிறந்து இரண்டு மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சடலம் இன்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் மீது தாக்குதல்; மேலும் மூன்று ரயில்வே ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்

John David

2024 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

Lincoln

Nigeria’s Calabar carnival: 14 killed at annual bikers’ event -BBC

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy