Sangathy
LatestSports

டெஸ்டில் 500-வது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் திடீரென அணியில் இருந்து விலகல் : ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியில் இருந்து விலகுவதாக ரவிசந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை பி.சி.சி.ஐ. நேற்றிரவு அறிவித்தது. குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

திடீரென அணியில் இருந்து விலகியுள்ள அஸ்வினுக்கு தேவையான உதவிகளை செய்ய கிரிக்கெட் வாரியம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றிய நிலையில், அவர் அணியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பி.சி.சி.ஐ. மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது,” என குறிப்பிட்டுள்ளது.

“ரவிசந்திரன் அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். தனது தாயாருடன் இருப்பதற்காக அவர் ராஸ்கோட் டெஸ்ட்-இல் இருந்து விலகி அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார்,” என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Related posts

Percy set for retirement giving us many points to ponder

Lincoln

Sri Lanka name spin-heavy squad for New Zealand ODIs

Lincoln

ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய வீரர்கள்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy