Sangathy
LatestNewsSrilanka

கோர விபத்தில் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் பலி..!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் உதவி விரிவுரையாளரான 27 வயதான யுவதி பத்தரமுல்ல, விக்கிரமசிங்கபுரவில் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறியில் அவர் மோதியுள்ளார்.

பத்தரமுல்லை, விக்கிரமசிங்கபுர, 10வது லேனில் வசித்து வந்த லக்மினி போகமுவ என்ற 27 வயதுடைய விரிவுரையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விக்கிரமசிங்கபுரவிலிருந்து வேலைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் சென்ற போது பத்தரமுல்ல பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச் சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2017ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரண்டு பதக்கங்களையும் புலமைப்பரிசில்களையும் பெற்று சிறந்த மாணவியாக தெரிவானவர் இவர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான லக்மினி சுலோத்தம போகமுவா (27) நடனம், பாடுதல் மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமையானவர்.

கொழும்பு பல்கலைக்கழகம், பத்தரமுல்ல கலை பீடத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றிய அவர், களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சந்திரசிறி போகமுவவின் ஒரே பிள்ளையாவார்.

கொழும்பு ஆனந்த பாலிகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி விசேட திறமையை வெளிப்படுத்திய மாணவிக்கு 2017 இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமர மொஹொட்டி ஞாபகார்த்த கிண்ணம் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஷெல்டன் கொடிகார விசேட கிண்ணம் மற்றும் சர்வதேச உறவுகள். புலமைப்பரிசிலும் வழங்கப்பட்டது.

உயிரிழந்த யுவதியின் இறுதிக் கிரியைகள் இன்று (21) மாலை 5 மணிக்கு இடம்பெறும்.

Related posts

Social media activist granted bail by Fort Magistrate

Lincoln

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்

Lincoln

புதிய அரசியல் கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ஸ ஆதரவு?

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy