Sangathy
News

2023-இல் ஒரு மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு

Colombo (News 1st) கடந்த ஆண்டில் (2023) ஒரு மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உட்பட பல நிறுவனங்களை துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் நேற்று அழைத்ததாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர்​ காமினி வலேபொட தெரிவித்தார்.

புதிய மின் இணைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் போது அதிகளவு பணம் செலவிடப்பட வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், மின்சார இணைப்பை மீள பெறுவதற்கான கட்டணத்தை ஓரிரு ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Bosnia Muslims remember Srebrenica massacre, worst atrocity on European soil since WWII

Lincoln

State Minister Kanaka explains sorry situation at SriLankan

Lincoln

Maldives: Bridge gender gaps to accelerate progress, say UN experts

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy