Sangathy
AsiaLatestNewsSrilanka

தம்புள்ளை பஸ் – கார் விபத்து : பிரான்ஸ் பிரஜைகள் வைத்தியசாலையில்..!

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் பெல்வெஹர பிரதேசத்தில் இன்று (04) காலை பஸ் ஒன்றும் காரும் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில், காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பிரஜைகளான குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் ஆண் குழந்தை, பேருந்தில் பயணித்த பெண் துறவி உள்ளிட்டோர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து சீகிரியா நோக்கி பயணித்த வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

பஸ் அதிவேகமாக பயணித்துள்ளதாகவும், மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிரே வந்த கார் மீது மோதியதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தின் பின் பஸ் வீதியின் குறுக்கே நின்றுள்ளதால், பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கார் அருகில் இருந்த சிறிய கடையின் உள்ளே புகுந்ததால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

பஸ்ஸின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும், பஸ்ஸில் பயணித்த சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அரசியல் கட்சிகளுக்கு பணம் கிடைக்கும் விதம் தொடர்பில் விசாரிக்க வேண்டும்: வஜிர அபேவர்தன

John David

US faces triple epidemic of flu, RSV, and covid

Lincoln

CC appointments: March 12 Movement suggests a different way

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy