Sangathy
News

ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்திய மக்களவைத் தேர்தல்

Colombo (News 1st) இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் திகதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

வாக்குகள் எண்ணும் நடவடிக்கை ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஏப்ரல் 19 ஆம் திகதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் திகதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22 ஆம் திகதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7 ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13 ஆம் திகதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஆறாம் கட்ட தேர்தல் மே 25 ஆம் திகதி 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் முதலாம் திகதி 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

ஏழு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் திகதி எண்ணப்படவிருக்கிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் கிட்டத்தட்ட 45 நாட்கள் இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் ஜூன் 7 ஆம் திகதி வௌியிடப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் Rajeev Kumar அறிவித்துள்ளார்.

Related posts

Ballot paper printing halted; postal voting may be postponed

Lincoln

AMC, Negombo recognises achievers

Lincoln

உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி இலங்கை வைத்தியர்கள் உலக சாதனை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy