Sangathy
HealthLifestyle

தாய்ப்பால் புகட்டும் தாய்மார்களுக்கு சில டிப்ஸ்…!

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் குழந்தைக்கும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது.

எனவே, உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மற்றும் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது

குழந்தை பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும்.

பிறந்த குழந்தைக்கு தாய் குறைந்தபட்சம் கட்டாயம் ஆறு மாதமாவது தாய்ப்பால் வழங்க வேண்டும். இன்று தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

பாகற்காய்:

பாகற்காயில் நிறைந்து காணப்படும் சபோனின்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்கக் கூடியது. இது சர்க்கரை நோயுள்ள தாய்மார்களுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவி செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும்.

கறிவேப்பில்லை:

ஆண்டி-ஆக்சிடன்ட் நிறைந்து காணப்படும் கறிவேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. இது இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. பாஸ்பரஸ், கால்சியம், இருப்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதுவும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

தண்ணீர்:

தாய்ப்பாலில் நீர் நிறைந்து காணப்படும் என்ற காரணத்தால், நாம் தண்ணீரை போதுமான அளவு எடுத்துக்கொள்ளாவிடில் தாய்ப்பாலின் அளவும் குறையும். ஆகையால், குறைந்தது நாளொன்றுக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

கொண்டைக்கடலை:

நார்சத்து, புரதம், வைட்டமின்கள் நிறைந்துள்ள கொண்டைக்கடலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

பால்:

கால்சியம், புரதம், கொழுப்பு, ஃபோலிக் அமிலம் நிறைந்து காணப்படும் பால், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும். அதேபோல சாலமன் மீன், தர்பூசணி, நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பாதாம், முருங்கை கீரை, பீட்ரூட், பருப்பு போன்றவையும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவி செய்யும் உணவுகள் ஆகும்.

Related posts

Few months of work made their body perfect

Lincoln

WHO warns new Ebola outbreak in Congo faces funding gap

Lincoln

Coronavirus: US reports 1,000 deaths in one day, California passes 4 lakh cases

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy