Sangathy
India

அந்தரங்க உறுப்பில் வீக்கம்.. “யார்கிட்டயும் சொல்லாதே” : 4 வயது சிறுமியை சீரழித்த மிருகம்..!

அந்த குழந்தைக்கு 4 வயதுதான் ஆகிறது.. டெல்லியில் பாண்டவ் நகர், டியூஷனுக்கு சிறுமி சென்றிருக்கிறாள்.. அப்போது டியூஷன் ஆசிரியர் அங்கு இல்லை.. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட, டியூஷன் வாத்தியாரின் சகோதரனுக்கு காமம் உச்சிக்கு ஏறிவிட்டது. 4 வயது குழந்தை என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி சொல்லியே, அந்த குழந்தையை மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறான். இதனால், குழந்தையின் உடல்நிலை மோசமாகி, வீட்டுக்கு விஷயம் தெரியவந்துள்ளது. அப்போதுதான், டியூஷனில் நடந்த கொடுமையை தன் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறாள் சிறுமி. உடனடியாக சிறுமியை கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது..

இது தொடர்பாக புகார் தருவதற்கு பெற்றோர் போலீசுக்கு ஓடியிருக்கிறார்கள். ஆனால் போலீசார் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இதனிடையே, சிறுமி கவலைக்கிடமாக இருக்கிறாள் என்ற தகவல்கள் வெளியாகவும், ஒட்டுமொத்த பொதுமக்களும் ஆவேசமாகி போலீஸ் ஸ்டேஷனில் திரண்டார்கள்.

ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள், கண்டும் காணாமல் இருந்த போலீசாரின் மெத்தனத்தை பார்த்ததுமே, மேலும் ஆத்திரமடைந்தார்கள். அத்துடன், வீதியில் இறங்கி போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.. கண்ணில் பட்ட வாகனங்களை எல்லாம் சூறையாடினார்கள்..

கார்களை உடைத்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.. சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டம், வன்முறையாக வெடிக்க துவங்கியது. நிலைமை மோசமாகி கொண்டிருப்பதை அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள்.. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை.

இறுதியில், சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் நலமுடன் இருப்பதாகவும் சொன்னார்கள். அதற்கு பிறகே பொதுமக்களின் ஆவேசம் ஓரளவு தணிந்தது.

டெல்லி கிழக்கு சரக கூடுதல் போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி சொல்லும்போது..,

“சிறுமியை 34 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மண்டவாலி போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் வரவும், அந்த நபர் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வதந்தி பரவியதால் பொதுமக்கள் திரண்டுவிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தினோம். பாதிக்கப்பட்ட குழந்தை தற்போது பாதுகாப்பாக இருக்கிறது” என்றார்.

டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா,

“சிறுமியின் உடல்நிலை உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்து விட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாக பேசுகிறார். சிறுமி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அவருடன் இருக்கிறார்கள்” என்கிறார்.

ஆனால், சிறுமியின் உடல்நிலை மோசமானதால்தான், போலீசார் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டினார்களே தவிர, அதுவரை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகிறார்கள். சிறுமியின் நிலைமை தற்போதும் சீரியசாகவே இருக்கிறாராம்.

அதுமட்டுமல்ல, டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரே கூறியிருப்பது,

“நாட்டின் தலைநகரையே பதற வைத்து வருகிறது. ஆக, பெண்களை தெய்வமாக மதித்து போற்றுவதாக சொல்லப்படும் இந்த தேசத்தில்தான், பெண் குழந்தைகள் மீதான பாதுகாப்பின்மையும், பாலியல் வக்கிரங்களும், நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றன. பச்சிளம் குழந்தைகள் பலியாகி கொண்டிருப்பதும், பாரத தாயின் புதல்வர்கள் என்று பெருமை கொள்ளும் இந்த தேசத்தில்தான்.

ஆடைகள் கிழிந்த நிலையில், பிறப்புறுப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்தோரிடம் உதவி கேட்க, “போ போ இங்கெல்லாம் நிற்காத” என்று துரத்தி விட்ட கொடூரம் நடந்ததும் இந்த தேசத்தில்தான்.

கண்ணை மறைக்கும் காமுகர்களுக்கு, 9 வயது புதுச்சேரி குழந்தையாக இருந்தால் என்ன? 4 வயது டெல்லி குழந்தையாக இருந்தால் என்ன? தன் வக்கிரத்தை தீர்த்து கொள்ளும் இதுபோன்ற வெறிபிடித்த மிருகங்களை, வெறுமனே போக்சோவில் மட்டும் கைது செய்துவிடாமல், குழந்தைகள் மீது “கை” வைக்கவே நடுநடுங்கும் அளவுக்கு மிக மிக கொடுமையான தண்டனையை தர வேண்டும் என்பதே நம் அனைவரது வேண்டுகோளாக முன்வைக்கப்படுகிறது.”

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவு..!

tharshi

கலிபோர்னியாவில் நடந்த விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி..!

tharshi

மோட்டார் சைக்கிளில் ‘ரொமான்ஸ்’ : இளம்பெண்களுக்கு ரூ.80000 அபராதம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy