Sangathy
Srilanka

கச்சத்தீவை அரசியலுக்காக கையாள்வதை கைவிட வேண்டும் : என் எம்.ஆலம்

இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சத்தீவு விடயம் தோன்றியுள்ளது. எனவே கச்சத்தீவு அரசியலுக்காக கையாள்வதை தமிழகமும் மத்திய அரசும் கைவிட வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என் எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியா மத்திய அரசிலும் தமிழகத்திலும் புதிதாக ஒரு நிலைப்பாடாக கச்சத்தீவு விடயம் தோன்றியுள்ளது. இதை அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்த கூறி இருந்தாலும் அங்குள்ள மீனவர்களை குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து மாற நினைக்கின்ற மீனவர்களை இத்தொழிலில் உள் வாங்கி அவர்களை உற்சாக மூட்டி மீண்டும் மீண்டும் அவர்களை சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கும், சட்டவிரோதமாக இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து மீன் பிடி நடவடிக்கையை முன்னெடுக்க ஆதரிப்பதாக காணப்படுகின்றது.

அரசியல் நோக்கம் ஒரு புறம் இருந்தாலும், இலங்கையில் தனது ஆதிக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகத்திலும் இந்திய மத்திய அரசும் மிகவும் கவனமாக செயல் படுகிறது. கச்சை தீவு விடையத்தை பல தடவை தமிழக அரசு தான் மேலோங்கச் செய்துள்ளது.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கச்சத்தீவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியது தமிழகம்.

தமிழக அரசின் ஒவ்வொரு கால கட்டத்திலான கோரிக்கையை மத்திய அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இன்று அந்த சாதகத்தின் வெளிப்பாடுதான் தமிழகம் தான் கச்சத்தீவை வழங்கியதற்கு முழுக்காரணம் என்று இன்று அவர்களின் அரசியலை வளர்த்துக் கொள்வதற்காக இந்த விடையத்தை மீண்டும் மீண்டும் ஒரு பூதாகரமான விடயமாக மாற்றியுள்ளனர்.

இலங்கை மீனவர்களை பொறுத்த வரையில் குறிப்பாக வட பகுதி மீனவர்களை பொறுத்த வரையில் இவர்களுக்கான ஒரே நிலைப்பாடு இந்திய மீனவர்கள் எமது எல்லையை தாண்டக்கூடாது.

எமது எல்லைக்குள் வந்து சட்ட விரோதமான இழுவை மடி தொழிலை முன்னெடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கின்றனர். எமது மீனவர்கள் முகம் கொடுக்கும் துன்பங்களும், போராட்டமும் அதனை வலியுறுத்தியதாக உள்ளது.

தமிழக அரசாக இருந்தாலும், இந்திய அரசாக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்காக இவ்விடயத்தை மீண்டும் மீண்டும் பேசி தமிழக மீனவர்களை உற்சாகப்படுத்துவதும் இவ்விடயத்தை கேலிக் கூத்தாக்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

Related posts

முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி..!

tharshi

தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் : அமைச்சர் டக்ளஸ் சூளுரை..!

tharshi

கெஹலிய ரம்புக்வெல்லவுகு பிணை மறுப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy