Sangathy
India

இந்தியாவை அவமதித்த மாலத்தீவு முன்னாள் அமைச்சர் : கிளம்பிய எதிர்ப்பால் மண்டியிட்டு மன்னிப்பு..!

இந்தியக் கோடியில் இருக்கும் அசோக சக்கரத்தை அவமதிக்கும் விதமாக மாலத்தீவின் முன்னால் அமைச்சர் மரியம் ஷியூனா பதிவை பகிர்ந்தார். இந்த பதிவிற்கு எதிர்ப்புகளும் கண்டனமும் குவிய மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

இந்தியா மற்றும் மாலத்தீவிற்கு இடையில் நல்ல நட்பு இருந்து வருகிறது. என்னதான், இந்தியாவிற்கு அருகில் இருக்கும் சிறிய தீவு நாடாக மாலத்தீவு இருந்தாலும் பூகோள ரீதியாக இன்னதியாவிற்கு மாலத்தீவு மிக முக்கிய நாடாக உள்ளது.

கடந்தாண்டு மாலத்தீவின் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அதிபராக பதவி ஏற்றார் முகமது முயிசு. இவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து இந்தியாவுடனான மாலத்தீவின் உறவில் சில விரிசல் விழத் துவங்கியது. அதிலும், இந்தியாவை தவிர்த்து மாலத்தீவு சீனாவிற்கு முன்னுரிமை கொடுத்தது.

இப்படியான சூழலில் இந்தியாவின் மூவர்ண கோடியில் இருக்கும் அசோக சக்கரத்தை அவமதிக்கும் விதமான ஒரு பதிவை பகிர்ந்தார் மலத்தீவின் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா. இவர் ஏற்கனவே, இந்தியா குறித்த சரசையான பேச்சை பேசியதால் அமைச்சரவையில் இருந்து நீக்கபட்டார். இப்போது மீண்டும் இந்தியா குறித்து கண்டிக்காதக்க செயலில் ஈடுபட்டார் மரியம்.

டெலீட் செய்யபட்ட மரியமின் பதிவில், “எம். டி. பி மிகப்பெரிய சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மாலத்தீவு மக்கள் அவர்களிடம் விழ விரும்பவில்லை” என பகிர்ந்து உடன் இந்திய அசோக சக்கரம் போன்ற ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தார்.

இதில், அக்கட்சியின் படத்திற்கு பதிலாக இந்தியா அசோக சக்கரம் போன்ற ஒன்றை பகிர்ந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் பாடு வைரலானது. இந்தியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் குவித்தது. தொடர்ந்து எழுந்த விமர்சனம் மற்றும் கண்டனதிற்கு பிறகு, மரியம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்த அவரது பதிவில்,

“எனது சமீபத்திய பதிவின் கருத்தினால் குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கு என்னுடைய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மாலத்தீவின் எதிர்க்கட்சியான எம். டி. பிக்கு நான் அளித்த பதிலில், பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை போலவே இருப்பது என் கவனதிற்கு கொண்டுவரப்பட்டது. இது முழுக்க முழுக்க தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். இந்தியாவுடனான உறவை மாலத்தீவு ஆழமாக மதிக்கிறது. எதிர்காலத்தில் நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பேன்” என மன்னிப்பு கேட்டு இருக்கிறார் மரியம்.

Related posts

விஜய் திவாஸை முன்னிட்டு மறைந்த இராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Lincoln

ரூ.200 கோடி மதிப்பிலான ஹவாலா பணம்..சிக்கிய தமிழர் : முக்கிய கட்சிக்கு கைமாற்ற திட்டமா..?

tharshi

அகதி முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை : சென்னை உயர் நீதிமன்றம் விசேட உத்தரவு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy