Sangathy
World Politics

மனித எலும்புகளில் போதைப்பொருள் : பிணத்தை தேடித் திரியும் வினோத கும்பல்..!

உலக நாடுகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. இந்த போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. உச்சகட்டமாக சென்று, மனித எலும்புகளில் இருந்து போதைப்பொருளை தயார்செய்ய பிணங்களைத் தேடி திரிகிறது சியரா லியோன் பகுதியில் இருக்கும் ஒரு மர்ம கும்பல். இதனால், நாட்டின் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சமீப காலக்கட்டத்தில் போதைப்பொருளுக்கான விற்பனை சந்தையும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதில், ஒரு படி மேலே சென்று மனித எலும்புகளில் உருவாக்கபடும் ஒருவித போதைப்பொருள் தற்போது நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய காரணமாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு தலைவிரித்தாடுகிறது. அங்கு மக்கள் பெரும்பாலானோர் ஏதோ ஒரு வகையான போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாகவே இருக்கின்றனர். அதிலும், சியரா லியோன் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் ‘குஷ்’ என்கிற ஒருவித போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இந்த குஷ் போதைப்பொருள் மனித எலும்புகளில் இருந்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாகவே இந்த குஷ் போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை பயன்படுத்தி ஏக்கச்சக்கமானோர் வீதியில் தள்ளாடியுள்ளனர். மேலும், இந்த குஷ் போதைப்பொருளுக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிக மார்க்கெட் உருவாகியதைத் தொடர்ந்து இதனை தயாரிப்பவர்கள் அப்பகுதியில் புதைக்குழிகளை தொண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளில் இருந்து குஷ் போதைப்பொருளை தயார் செய்துவருகிறார்களாம்.

இப்படி பிணங்களை சேகரிப்பதே அங்கு ஒரு தொழிலாக மாறி இருக்கிறதாம். சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைக்குழிகளை இந்த கும்பல் தோண்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியின் மயான உள்ளாட்சி நிர்வாகம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறபட்டுள்ளது. குறிப்பாக ஃப்ரீடவுன் போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் கல்லறைகளுக்கு பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த குஷ் மூலம் நாட்டில் குடியிறுப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குஷ் போதைப்பொருளை உட்கொள்வதன்மூலம் உயிரிழப்புகள் அதிகமாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறபட்டுள்ளது. இதன் பிடியில் இருந்து மக்களை மீட்க ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் என சொல்லியிறுகிறார் ஜனாதிபதி. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சமீபகாலமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்த குஷ் போதைப்பொருளை உட்கொண்டதால் உடல் உறுப்புகள் சேதமாகி உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாது, முகம் வீங்கிய நிலையிலும், உடல் முழுவதும் காயங்களுடனும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவமனைக்கு வந்து அனுமதி பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், சியரா லியோனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்..!

tharshi

இஸ்ரேல்-ஹமாஸ் போா் : தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் பலி..!

tharshi

இந்தோனேசியாவில் மண்சரிவு : 19 பேர் உயிரிழப்பு – 7 பேர் மாயம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy