Sangathy
Sports

ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் : பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்..!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா நல்ல துவக்கம் கொடுத்தார். 22 பந்துகளில் 32 ரன்களை குவித்த பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்துகளில் 55 ரன்களை விளாசிய ஜேக் ஃபிரேசர் நவீன் உல் ஹக் பந்தில் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 24 பந்துகளில் 41 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2024 ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

லக்னோ சார்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் மற்றும் நவீன் உல் ஹக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related posts

Lincoln

Gill ton in vain as Bangladesh sign off with victory

Lincoln

Deepti, Ghosh help India make it two in two

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy