Sangathy
India

கொளுத்தும் வெயிலால் ரெட் அலர்ட் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

கொளுத்தும் வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக இந்திய வானிலை மையம் ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கூடவே வெப்ப அலையும் வீசி மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. வெளுத்தெடுக்கும் வெயிலால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சில மாநிலங்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆந்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற கடுமையான வெயில் மே 2ம் தேதி வரை தொடரும் என்றும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. முடிந்தவரை மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கம், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம், தெலுங்கானா, உள் கர்நாடகா கேரளாவின் பாலக்காடு மற்றும் ஜார்கண்ட் ஆகிய பகுதிகளுக்கு IMD ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிளில் உள்ள மக்களும் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், வெயிலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகள் கடுமையான வெப்பநிலையுடன் போராடி வருவதால், அரசு நிறுவனங்கள் சுகாதார ஆலோசனைகளை வழங்கியுள்ளன. சில பகுதிகளில் கல்வி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம், குஜராத், பீகார், சிக்கிம், ஒடிசா, ஜார்கண்ட், கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திங்கள்கிழமை வெப்ப அலைகள் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு அசாம், திரிபுரா, குஜராத், தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக ஈரப்பதம் இருக்கும் என்றும் அடுத்த 5 நாட்களுக்கு தென் தீபகற்ப இந்தியாவில் வெப்ப அலை நிலைகள் தொடரும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகப்பட்சமாக தெலங்கானா மாநிலத்தில் 6 இடங்களில் 46 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. ஜைனா (ஜக்தியால்) மற்றும் மதுகுலப்பள்ளி (நல்கொண்டா) பகுதிகளில்க 46.2 டிகிரி செல்சியஸ் அதாவது 115.16 டிகிரி ஃபேரன்ஹிட் ஆகும். அதைத் தொடர்ந்து அல்லிபூரில் (ஜக்டியல்) 46.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கோல்வாய் (ஜக்தியால்) மற்றும் கொத்தகட்டு (கரீம்நகர்), மற்றும் வீணவங்க (கரீம்நகர்) ஆகிய பகுதிகளில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Related posts

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன் : தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி..!

tharshi

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : அதிரடி காட்டிய போலீஸ்..!

tharshi

இந்தியாவில் பிரேசில் சுற்றுலாப் பயணி கூட்டுப் பலாத்காரம் : பெரும் பரபரப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy