Sangathy
Sports

20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை..!

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.

இப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க வீரர்களாக ரஹானே, ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரஹானே 5 ஓட்டங்களிலும், ரவீந்திரா 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அணித் தலைவர் ருதுராஜ் கெய்குவாட், சிவம் துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் ஆடிய கெய்குவாட் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 69 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க. பின்னர், மிச்சேல் உடன் ஜோடி சேர்ந்து தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்தார்.

மிச்சேல் 17 ஓட்டங்களில் ஆட்டமிழக்க. அடுத்து களமிறங்கிய டோனி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ஓட்டங்கள் குவித்தது.

ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ஓட்டங்களிலும், டோனி 4 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 20 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷான் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி ஓட்டங்களை குவித்தார். சென்னை அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட ரோகித் சர்மா சதமடித்தார். மறுபுறம் திலக் வர்மா 31 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை மட்டும் எடுத்து. இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 63 பந்துகளில் 103 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரன 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 

Related posts

At Modi’s hometown  

John David

Preparation for cycle race almost completed

Lincoln

Chamika available for selection despite emergency dental surgery

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy