Sangathy
World Politics

வயதான தம்பதிக்கு ‘போன் பில்’ ரூ.12 லட்சம் வந்ததால் அதிர்ச்சி..!

உலகம் முழுவதுமே ஆன்ட்ராய்டு மொபைல் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் புளோரிடாவை சேர்ந்த ஒரு வயதான தம்பதிக்கு போன் பில் கட்டணமாக ரூ.12 லட்சம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ரெனேரேமண்ட் என்ற 71 வயதான முதியவர் தனது மனைவி லின்டாவுடன் (வயது 65) சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில், அவர் வெளிநாட்டில் பயன்படுத்திய மொபைல் டேட்டாவுக்கு கட்டணமாக 1,43,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12 லட்சம்) வந்துள்ளது.

அவர் 30 ஆண்டுகளாக டி- மொபைல் நிறுவன வாடிக்கையாளராக உள்ள நிலையில், தனக்கு வந்த போன் பில்லால் அதிர்ச்சி அடைந்தார். அவர் சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனத்தின் சேவை பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்தார்.

எனினும் அதிகாரிகள் முதலில் சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் வயதான தம்பதியினர் சட்ட உதவியை நாடிய நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு உரிய விளக்கம் அளித்துள்ளது.

Related posts

மின்சார குக்கரை ‘ஆன்’ செய்த பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு..!

tharshi

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 45 பேர் பலி..!

tharshi

தன்பாலின திருமணத்திற்கு தடை.. திருநங்கை, திருநம்பிகளுக்கு சிறை தண்டனை : ஈராக் அதிரடி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy