Sangathy
World Politics

இறந்த அம்மா உடலில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசு : ரஃபா தாக்குதலில் பிறக்கும்போதே குடும்பத்தை இழந்த சோகம்..!

பாலஸ்தீனர்களை அழிக்கும் ஒரு செயலாக இஸ்ரேல், ரஃபா நகர்மீது தாக்குதலை செய்தது. இதில், தனது ஓட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து பிறந்து இருக்கிறது அழகான பெண் குழந்தை.

ஹமாஸ் படையினரை அழிப்பதற்காக இஸ்ரேல் பலத்த போரினை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போரில் சுமார் 35000 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா சுக்குநூறாக உடைந்தது. உயிரிழந்தவர்களுள் மூன்றில் இரண்டு பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது மனதை பதைபதைக்க வைக்கிறது. இந்த புள்ளிவிவரத்தை காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

காஸா மீதான தாக்குதல் தீவிரமான நிலையில் எக்கச்சக்கமான மக்கள் அந்நாட்டின் எல்லை நகரான ரஃபா நகருக்கு குடிபெயர்ந்தார்கள். இஸ்ரேல் குறிவைக்கும் ஹமாஸ் குழுவினரும் அந்த நகருக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள். இதனால், இஸ்ரேல் திட்டம் வகுத்து ரஃபா நகரில் இருக்கும் ஹமாஸ் படையினரை அட்டாக் செய்ய திட்டமிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான தாக்குதலையும் நடத்தியது.

பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை என பாரபட்சமே பாராது தாக்குதலை செய்தது இஸ்ரேல் ராணுவம். ரஃபா நகர் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் அப்பாவி மக்களின் உயிரை பலிவாங்கி வருகிறது. கர்ப்பினி பெண்கள், குழந்தைகள் என பலரது உயிர் பறிபோனது. கொத்துக்கொத்தன உயிர் பலியான நிலையில் ஒரு அழகிய பெண் குழந்தை சப்ரீன் ஜோதா போர் முனை நகராக இருக்கும் ரஃபா நகரில் ஜனனித்து இருக்கிறது.

தாக்குதலில் ஜோதாவின் அப்பா, அம்மா, சகோதரி என அனைவரும் இறந்து இருக்கிறார்கள். அம்மா வயிற்றில் இருந்த ஜோதா மருத்துவர்களின் முயற்சியால் இந்த பூமிக்கு வந்து இருக்கிறார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சப்ரீன் அல் சகாணி அப்பகுதியில் விழுந்து துடித்திருக்கிறார். அவர் அங்கேயே இறந்தும் இருக்கிறார். அப்போது அவர் 30 வாரம் கருவுற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக, அங்கு இருந்த பேரிடர் மீட்புக்குழுவினர் இவரை அருகில் இருந்த குவாய்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பலியான சப்ரீன் அல் சகாணிக்கு அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்த குழந்தையை மீட்டனர். பிறந்த குழந்தை அங்கு பிழைக்குமா இல்லையா என்கிற நிலையில் துடித்திருக்க, செயற்கை சுவாசத்தை கொடுத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அதன்பிறகு, சிசு உயிர் தப்பியது.

அம்மா இறந்ததால் குறை மாதத்தில் குழந்தை வெளியே வரப்பட்டது. இதனால், குழந்தைக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக குழந்தையை பிரசவித்த மருத்துவர் தெரிவித்து இருக்கிறார். மேலும், இந்த குழந்தை அதன் தந்தை வழி பாட்டியிடம் ஒப்படைக்கக்பட்டுள்ளது. ரஃபா நகரமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 17 குழந்தைகளும் 2 பெண்களும் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம் : அமெரிக்கா எச்சரிக்கை..!

tharshi

மெக்சிகோவில் ஹெலிகொப்டர் விபத்து : 3 இராணுவ வீரர்கள் பலி..!

Lincoln

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 12 மீனவா்கள் உயிரிழப்பு : இருவர் மாயம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy