Sangathy
News

ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் சந்தர்ப்பம் கோரப்பட்ட போதிலும், இதுவரை அதற்கும் எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடனான கலந்துரையாடலை நடத்துவதற்கு இனியும் எதிர்பார்க்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் புது வருடத்திற்கு முன்னர் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

Police attack on NPP protest: HRC orders IGP to submit report

Lincoln

US funded fortified rice shipments begin arriving at Colombo Port

Lincoln

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy