Sangathy
News

இலங்கையின் கடன் வழங்குநர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்

Colombo (News 1st) இலங்கையின் சகல கடன் வழங்குநர்களும் பங்கேற்ற கலந்துரையாடலொன்று நேற்று(09) நடைபெற்றது.

கண்காணிப்பு மட்டத்தின் அடிப்படையில் சீனா இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளது.

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் Online கலந்துரையாடலில் பங்கேற்றதுடன் இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களும் தனித்தனியான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு பதிலாக பொதுவான தளத்தை உருவாக்குவதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

இரு தரப்பு கடன் வழங்குநர்களுக்கு 7.1 பில்லியன் டொலரையும் சீனாவுக்கு 3 பில்லியன் டொலரையும் இந்தியாவிற்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலரையும் Paris கிளப்பிற்கு 2.4 பில்லியன் டொலரையும் இலங்கை கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

12 பில்லியன் டொலர்களுக்கு அதிகமான யூரோ பிணைமுறிகள் மற்றும் 2.7 பில்லியன் டொலர் பெறுமதியான வணிகக் கடன்கள் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடும் நோக்குடன் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ள பின்புலத்திலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13 பில்லியன் டொலருக்கும் அதிகமான உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கு மேலதிகமாகவே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

Related posts

Prolonged hot weather to continue

John David

Further increase in malnutrition among children

Lincoln

Wanidu stars as B-Love Kandy crush Jaffna Kings by eight wickets

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy