Sangathy
News

சோளச் செய்கையாளர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவு

Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை பண்படுத்துவதற்காக ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அம்பாறை, பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு மாத்திரமே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

சிறிய அளவிலான விவசாய தொழில் முனைவோர் பங்கேற்பு திட்டத்தின் கீழ் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், சோளச் செய்கைக்கு தேவையான கிருமிநாசினிகள், உரங்கள் என்பனவும் இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

சிறிய அளவிலான விவசாய தொழில் முனைவோர் பங்கேற்பு திட்டத்தின் கீழ், இந்த 5 மாவட்டங்களிலும் 22000 ஏக்கரில் சோளச் செய்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ள கலா வாவி; அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

John David

Ukraine dam hit by Russian missiles in Zelenskyy’s hometown

Lincoln

CEB employees will be absorbed into new companies after restructuring

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy