Sangathy
News

73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 29 வீதம் வரை குறைவு – நீர்ப்பாசன திணைக்களம்

Colombo (News 1st) நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி விதானப்பத்திரண கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் வறட்சியினால் நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 15 மாவட்டங்களிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 75,287 பேர் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

Italy earn late win over Argentina

Lincoln

இலங்கை அரசாங்கத்திற்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு ஜப்பான் வௌிவிவகார அமைச்சரிடம் சஜித் பிரேமதாச கோரிக்கை

Lincoln

Drug dealer assaulted, wife raped for failure to settle dues

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy