Sangathy
News

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(14) ஆரம்பம்

Colombo (News 1st) 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(14) ஆரம்பமாகவுள்ளது.

அதற்கமைய இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நேற்று(13) சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(14) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையான 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 க்கு இடம்பெறவுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதிக்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் முன்னிலையாவது கட்டாயமாகும்.

விவாதம் இடம்பெறும் காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் இருக்கும் வகையில் தங்களின் ஏனைய செயற்பாடுகளை முறைமைப்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lincoln

Electricity users threaten legal action if power tariffs hiked again unilaterally by Minister

Lincoln

Hakeem discusses Oluvil port with Indian HC

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy