Sangathy
News

சீனாவில் சிறுவர்களிடையே பரவும் நிமோனியா தொற்று; உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை கோரியுள்ளது

China: சீனாவின் வட பகுதியில் பரவும் நிமோனியா அலை தொடர்பான தகவல்களை சீனாவிடம் உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது. 

நிமோனியாவால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் காரணமாக சீனாவின் சில பகுதிகளில் வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குளிர்காலத்தில் காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரிப்பதற்கு COVID தடுப்பு நடவடிக்கைகள் நீக்கப்பட்டதே காரணம் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிமோனியா பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீனாவில் உள்ள மக்களை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

SARS-CoV-2 வைரஸ் பரவல், இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல், இன்னும் பிற தொற்றுகளின் நிலவரம் குறித்து தெளிவான அறிக்கை அளிக்கும்படி உலக சுகாதார நிறுவனம் சீன அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

குழந்தைகளை பாதிக்கும் RSV வைரஸ், மைகோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை பற்றியும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் பரவிய COVID-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல இலட்சம் பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தற்போது பரவும் நிமோனியா தொற்று உலக நாடுகளை கவலை கொள்ளச்செய்துள்ளது.

Related posts

அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கு யோசனை முன்வைப்பு

Lincoln

Fire knocks out half of Argentina’s power grid

Lincoln

வரிப் பிரச்சினையை தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy