Sangathy
News

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற பருத்தித்துறை இளைஞன் கைது

சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டார் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள இவர், விமான அனுமதிக்கான சோதனையின் போது இவரது ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையில் குறித்த கடவுச்சீட்டு போலியான தகவல்களுடன் தயாரிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போலி கடவுச்சீட்டு தனது தாயின் சகோதரனான தனது மாமாவின் உதவியுடன் தரகர் ஒருவரிடத்தில் 40 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் இலங்கையில் இருந்து கட்டார் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மூளைக்காய்ச்சல் ஆபத்துள்ள சிறைச்சாலைகளுக்கு நோயெதிர்ப்பு மருந்து

John David

‘Finace Ministry could not have been unaware of SriLankan, CPC bonuses’

Lincoln

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து மகாவலி வலயங்களுக்கு நீர்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy