Sangathy
News

கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து மகாவலி வலயங்களுக்கு நீர்

Colombo (News 1st) கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து 2000 ஏக்கர் அடி நீரை மகாவலி பகுதிகளுக்கு விடுவிக்க இலங்கை மகாவலி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது நீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் கலா வாவி, நாச்சதுவ மற்றும் தம்புலு ஓயா ஆகிய பகுதிகளுக்கு நீர் திறந்து விடப்படவுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

பொல்கொல்லயிலிருந்து போவதென்ன வரை சுரங்கப்பாதை ஊடாக நீர் கொண்டு செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, சிறுபோகத்திற்காக விடுவிக்கப்படும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related posts

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி

John David

Supreme Court expected to rule on Trump’s tax records

Lincoln

Happy Birthday Rita Ora (POP SINGER)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy