Sangathy
NewsSrilanka

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள் மூடிமறைப்பு – அனுர குற்றச்சாட்டு

கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளவது குறித்து முழுமையான விளக்கத்தினை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய (12) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி பூநகரி குளத்திலிருந்து 700 மெகாவொட் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மின் உற்பத்தியை மேற்கொண்டு நமக்கு மின்சாரம் வழங்குவதற்காக நாம் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை நாம் கொள்வனவு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் பெறுமதி எவ்வளவு என்பதை அறிந்துக்கொள்ள விரும்புகின்றேன்.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைவாக ஒரு அலகு மின்சாரத்தின் பெறுமதி 50 ரூபாவாகும். சூரிய மின் உற்பத்தி நாட்டில் அதிகாரித்தால் மின்சார கட்டணங்கள் குறைவடையும் என்ற பாரிய எதிர்பார்ப்பு ஒன்று நம் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது.

ஆகவே இது தொடர்பில் தெளிவுப்படுத்துங்கள். அதேநேரம் இவற்றுக்கு வெளிப்படையான விலைமனுக்கோரல்கள் முன்வைக்கப்படுவதில்லை. அனைத்தும் மறைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

Related posts

Modernisation of northern railway line between Maho and Omanthai begins

Lincoln

மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்குமாறு கோரவில்லை – சாகர காரியவசம்

Lincoln

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம்: சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy