Sangathy
News

உலக வங்கியிடமிருந்து 34 மில்லியன் டொலர் கடனுதவி

Colombo (News 1st) ஆரம்ப சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டும் திட்டத்தின் கீழ், உலக வங்கியினால் 34 மில்லியன் டொலர் கடனுதவி திறைசேறிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கியிடமிருந்து மேலும் 20 மில்லியன் டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளதாக அதன் திட்டப் பணிப்பாளர், வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் முடிவுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நிதியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை வலுவூட்டும் திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து இதுவரை சுமார்  160 மில்லியன் டொலர் கிடைத்துள்ளது.

மேலும், 20 மில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கு அடுத்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

Holy Easter Massacre

Lincoln

Ex-UK HC to SL, Gladstone, 87, in legal wrangle over property inherited from late wife

Lincoln

தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டை இடைநிறுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy