Sangathy
News

வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்தவரை கடத்திய இருவர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரை வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்ளையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 53 வயதான நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , இரு இளைஞர்களை கைது செய்ததுடன் , கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபரையும் மீட்டு இருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி தம்மிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி வந்தமையால், அவரிடம் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்ளவே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து , கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, இரு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

Related posts

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lincoln

Over 13,000 families in NCP facing severe food insecurity

Lincoln

மியன்மாரில் தாய்லாந்து எல்லையை அண்மித்துள்ள முகாமில் தஞ்சமடையும் இலங்கையர்கள்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy