Sangathy
News

9 மாவட்டங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரிப்பு

9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கல்முனையிலும் இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் ஜனவரி 06 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டில் தட்டம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கையை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Related posts

22 A: Amendments accepted at ‘committee stage’ should be subjected to SC approval

Lincoln

Bad weather to continue for several days

Lincoln

Jaffna Tamil gets OBE

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy