Sangathy
IndiaNews

இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரித்தானிய பிரதமரின் அத்தை..!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அத்தை சுதா மூர்த்தி இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

எழுத்தாளர் மற்றும் சமூக சேவகரான இவர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதாவின் தாயார் மற்றும் கோடீஸ்வர தொழிலதிபர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார்.

இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் மக்கள் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாட்டின் குடியரசுத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில் 12 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் மரபுப்படி 73 வயதான சுதா மூர்த்திக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

சுனக்கின் அத்தையை 6 வருட காலத்துக்குத் தேர்வு செய்துள்ளதோடு, தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் நாட்டின் தடகளத் துறையில் இருந்து உலகையே வென்ற பி.டி.உஷாவும் உள்ளனர்.

சமூக சேவைக்காக இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகனான பத்ம பூஷன் விருது பெற்ற சுதா மூர்த்திக்கு 2006 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

CID ordered to probe disappearance of documents given by Minister Gamage to Immigration Dept.

Lincoln

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன் : தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி..!

tharshi

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் அன்பளிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy