Sangathy
News

குடிநீர் பிரச்சினைகளை 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்க முடியும்

Colombo (News 1st) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (16) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய பகுதிகளில் இன்றும் கடும் வெப்பம் நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் ஆயிரத்து 232 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரம் பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் வறட்சி தொடர்ந்து வரும் நிலையில், குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பொதுமக்களுக்கு இடர் முகாமைத்துவ நிலையம் அவசர அழைப்பு இலக்கமொன்றை அறிவித்துள்ளது.

குடிநீ​ரை பெற்றுக்கொள்வதில் காணப்படும்  சிக்கல்களை 117 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாகவும், இந்த வறட்சிக் காலத்தில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

Related posts

Minister: Legal action will be taken against Third Secretary of Lankan Embassy in Oman

Lincoln

Lankan refugees in Vietnam appeal: “Don’t send us back home”

Lincoln

உலக வளங்களை பாதுகாக்க மீள் சுழற்சி செய்வோம்!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy