2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு செயற்பாடு திருகோணமலையில் முன்னெடுப்பு

Colombo (News 1st) 2024 ஆம் ஆண்டுக்கான குடிசன, வீட்டுவசதிகள் தொகைமதிப்பு செயற்பாடு திருகோணமலையில் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உத்தியோகபூர்வ கணக்கீட்டு வரைபடம் மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles