சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு இன்று(09)

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) வருடாந்த மாநாடு மொரோக்கோவின் Marrakech நகரில் இன்று(09) ஆரம்பமாகின்றது.

இந்த மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மாநாட்டில், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு பங்கேற்கவுள்ளது.

உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புகளின் ஊடாக சர்வதேச நம்பிக்கையை மேலும் பலப்படுத்திக் கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் இலங்கைக்கு இயலுமானதாக இருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷெமசிங்க அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை, 2024 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி கொண்டுசெல்வதற்கான பின்னணியை இதனூடாக ஏற்படுத்திக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles