அமரர் தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் (வீராமலை)

பிறப்பு19 MAY 1947, இறப்பு30 OCT 2022

வயது 75

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், 201 காலி வீதி கொள்ளுப்பிட்டி, கொழும்பு வெள்ளவத்தை டபுள்யூ. ஏ. சில்வா மாவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை லோகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:20/10/2023.

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே
ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு நிகர்
வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும்
எம் மனம் உறங்கவில்லை
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால்
நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள் முகம்
பார்த்து விடமாட்டோமா..!?
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா?
அப்பா எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!

 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மாலா மனைவி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles