மனிதாபிமான உதவிகளுக்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி இணக்கம்

Colombo (News 1st) ரஃபா எல்லையை திறப்பதற்கு எகிப்து ஜனாதிபதி Abdel Fattah El-Sisi
இணக்கம் தெரிவித்துள்ளார்.

காசா எல்லைக்கான உதவிப் பொருட்கள் அடங்கிய சுமார் 20 ட்ரக் வாகனங்கள் செல்வதற்காக ரஃபா எல்லையை திறக்க எகிப்திய ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

காசா பிராந்தியத்திற்கான “நிலையான” மனிதாபிமான உதவிகளை எகிப்து  உறுதிப்படுத்துவதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலில் சிக்கி 4500-இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகொண்டுள்ள இலக்குகளை தாக்கி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது.

லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள இரண்டு கிராமங்களை இலக்கு வைத்து இன்று அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles