ஐந்து நிறுவனங்களின் வருடாந்த வருமானம் 925 மில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் கையளிப்பு

Colombo (News 1st) ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சுக்கு சொந்தமான 5 நிறுவனங்களின் வருடாந்த வருமானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

திறைசேரிக்கு வழங்கும் நோக்கில் இந்த 925 மில்லியன் ரூபா நிதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

தேசிய இரத்தினங்கள் மற்றும் ஆபரண அதிகார சபையின் 350 மில்லியன் ரூபா, வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் 300 மில்லியன் ரூபா, BCC நிறுவனத்தின் 100 மில்லியன் ரூபா, தேசிய உப்பு மற்றும் சிமென்ட் நிறுவனத்தின் 175 மில்லியன் ரூபா வருமானங்களே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles