தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

Colombo (News 1st) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு (NMRA) பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டொக்டர் விஜித்த குணசேகர அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னரே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட இரசாயனவியல் நிபுணர் D.D.புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார். 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் குழாமினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு நிரந்தர தலைவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பணிப்பாளர் குழாமின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார். 

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட டொக்டர் விஜித்த குணசேகர சமீபத்தில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர், பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட  டொக்டர் விஜித் குணசேகர மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஆவணங்களை அழித்ததாக சுகாதாரத் தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். 

இதேவேளை, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி தற்போது தேசிய வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டின.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles